Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

எண்ணெய் கசிவைச் சுத்தம் செய்யும் மலேசியா

இரசாயனத் துகள்களைப் பயன்படுத்தி கடல் மாசுபாட்டை மலேசியா கட்டுப்படுத்தவுள்ளது.

வாசிப்புநேரம் -

இரசாயனத் துகள்களைப் பயன்படுத்தி கடல் மாசுபாட்டை மலேசியா கட்டுப்படுத்தவுள்ளது.

கடந்த வாரம் மலேசியக் கடற்பகுதியில் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் விபத்துக்குள்ளானது. அதில் ஆறு இந்தோனேசிய மாலுமிகளையும் காணவில்லை.

விபத்தைத் தொடர்ந்து கடலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.

இரண்டு கடல்துறைப் படகுகள் மூலம் இரசாயனத் துகள்கள் மூன்று கிலோமீட்டர் வரை தூவப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

கசிவு பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு மேம்பாட்டுத் திட்டம் நடக்கும் இடத்தின் அருகில் நடந்தது.

எண்ணெய்க் கசிவு கப்பல் நடவடிக்கைகளைப் பாதிக்கவில்லை என்றும், விபத்து நடந்த இடம் மீன்பிடிப் பகுதி இல்லையென்றும் அதிகாரிகள் கூறினர்.

கழிவுகள் கரையோரத்தை அணுகாது எனவும், ஓரிரு நாட்களில் கழிவுகள் சுத்தம் செய்யப்படுமென்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்