Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"வடகொரியாவுடன் பேச்சு நடத்துவதற்கான நேரம் முடிவடைந்துவிட்டது": ஜப்பானிய பிரதமர்

ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, வடகொரியாவுடன் பேச்சு நடத்துவதற்கான நேரம் முடிவடைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
"வடகொரியாவுடன் பேச்சு நடத்துவதற்கான நேரம் முடிவடைந்துவிட்டது": ஜப்பானிய பிரதமர்

(படம்: TIMOTHY A. CLARY/AFP)

ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, வடகொரியாவுடன் பேச்சு நடத்துவதற்கான நேரம் முடிவடைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையில் அவர் உரையாற்றினார்.

பியோங்யாங்கின் அதிகரித்துவரும் மிரட்டலைக் கையாள்வதற்கு அனைத்துவிதமான சாத்தியங்களும் ஆலோசிக்கப்படுவதாக அமெரிக்கா கூறிய கருத்தைத் திரு. அபே ஆதரித்தார்.

வடகொரியாவைக் கட்டுப்படுத்தும் அனைத்துலக முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றார் அவர்.

நடவடிக்கை எடுக்கக் குறைவான நேரமே எஞ்சியிருப்பதாக ஜப்பானியப் பிரதமர் குறிப்பிட்டார்.

வடகொரியாவின் ராணுவ பலம் அதிகரித்துவருவதாகவும் அவர் எச்சரித்தார்.

பியோங்யாங் ஹைட்ரஜன் குண்டுகளையும், நெடுந்தொலைவு ஏவுகணைகளையும் தயாரிப்பதில் முனைப்பாய் இருப்பதைத் திரு. அபே சுட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்