Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ரொஹிஞ்சா மக்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு ஐ.நா. உத்தரவு

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் அப்பாவிப் பொதுமக்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ரொஹிஞ்சா மக்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு ஐ.நா. உத்தரவு

(படம்: AP/Bernat Armangue)

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் அப்பாவிப் பொதுமக்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையில் பேசிய மியன்மாரின் துணை அதிபர் அவ்வாறு கூறினார்.

பொருட்சேதத்தைத் தவிர்க்கவும் முழு அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

நாட்டின் நீதித்துறை, மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கடுமையாகக் கையாளும் என்று திரு. ஹென்ரி வான் தியோ கூறினார்.

ரக்கைன் மாநிலத்திலிருந்து ரொஹிஞ்சா மக்கள் மட்டும் தப்பியோடவில்லை. மற்ற சிறுபான்மை இனத்தினரும் அங்கிருந்து வெளியேறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அமெரிக்கத் துணை அதிபர் மியன்மாரில் நடக்கும் வன்செயல்கள் அந்த வட்டாரத்துக்கு மட்டுமின்றி, அதற்கப்பாலும் மிரட்டலாகத் திகழ்வதாகக் கூறியிருந்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்