Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குடியேறிகள் விவகாரம்: இந்தோனேசியா, மலேசியா, அமெரிக்கா மியன்மார் பயணம்

அமெரிக்க, இந்தோனேசிய, மலேசிய அதிகாரிகள் இன்று மியன்மார் சென்றுள்ளனர்

வாசிப்புநேரம் -
குடியேறிகள் விவகாரம்: இந்தோனேசியா, மலேசியா, அமெரிக்கா மியன்மார் பயணம்

(படம்: REUTERS/Beawiharta)

அமெரிக்க, இந்தோனேசிய, மலேசிய அதிகாரிகள் இன்று மியன்மார் சென்றுள்ளனர். அண்மை நாட்களாக மோசமாகிவரும் கள்ளக்குடியேறிகளின் சர்ச்சை குறித்து மியன்மார் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது அந்தப் பயணத்தின் நோக்கம். இந்தோனேசியா, தாய்லந்து, மலேசியா ஆகிய மூன்றும், வேறு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாகக் குடிபெயர முயற்சி செய்வோர் வரும் படகுகளை  அனுமதிக்கப்போவதாகக் கூறியிருந்தன. அதனைத் தொடர்ந்து மூன்று நாடுகளும் அவற்றின் அதிகாரிகளை மியன்மாருக்கு அனுப்பிவைத்துள்ளன. வாரக் கணக்காக அந்தப் படகுகள், கடலில் அங்குமிங்கும் தத்தளித்ததைத் தொடர்ந்து, கரைக்குள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கடலில் அகப்பட்டிருக்கும் ஆயிரக் கணக்கானோருக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள மியன்மார் நெருக்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்