Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பினாங்கில் பலத்த மழையால் வெள்ளம்

பினாங்கில் இரவு முழுதும் பெய்த கடும் மழையால் சுமார் 20 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தெலுக் கும்பார் கிராமத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 100 பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.   

வாசிப்புநேரம் -
பினாங்கில் பலத்த மழையால் வெள்ளம்

படம்: Malay Mail Online

பினாங்கில் இரவு முழுதும் பெய்த கடும் மழையால் சுமார் 20 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தெலுக் கும்பார் கிராமத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 100 பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.  

அவர்கள், அந்தக் கிராமத்திலுள்ள சமூக மன்றத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  அக்கிராமத்தில், சில இடங்களில் வெள்ளநீர் 2 அடி வரை உயர்ந்துள்ளது.

சுங்கை பினாங்கு (Sungai Pinang), சுங்கை ஆயர் ஈத்தாம் (Sungai Air Itam) ஆகிய இரண்டு முக்கியமான ஆறுகளில், நீர்மட்டம் அபாய நிலையை எட்டியுள்ளது. 

பினாங்கின் முக்கிய நிலப்பகுதியிலும் ஓரளவு வெள்ளம் ஏற்பட்டாலும் யாரையும் அங்கிருந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் ஆகிய மாநிலங்களில், தொடர்ந்து நாளைவரை மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்