Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குரங்குக் குட்டிகள் உள்ளிட்ட விலங்குகளைக் கடத்த முயன்ற மலேசிய ஆடவர் கைது

விலங்குகள் சிலவற்றைக் கள்ளத்தளமாகக் கடத்திச் செல்ல முயன்ற மலேசிய ஆடவரைத் தாய்லந்து வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். 2 மனிதக் குரங்குக் குட்டிகள், 51 ஆமைகள், 6 ரக்கூன்கள் ஆகியவற்றை வைத்திருந்த 63 வயது இஸ்மாயில், மலேசிய-தாய்லந்து எல்லைப் பகுதியில் பிடிபட்டார்.

வாசிப்புநேரம் -
குரங்குக் குட்டிகள் உள்ளிட்ட விலங்குகளைக் கடத்த முயன்ற மலேசிய ஆடவர் கைது

குரங்குக் குட்டிகள். கோப்புப் படம்.

விலங்குகள் சிலவற்றைக் கள்ளத்தளமாகக் கடத்திச் செல்ல முயன்ற மலேசிய ஆடவரைத் தாய்லந்து வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். 2 மனிதக் குரங்குக் குட்டிகள், 51 ஆமைகள், 6 ரக்கூன்கள் ஆகியவற்றை வைத்திருந்த 63 வயது இஸ்மாயில், மலேசிய-தாய்லந்து எல்லைப் பகுதியில் பிடிபட்டார்.

காருக்குள் விலங்குகளைப் பிளாஸ்டிக் பெட்டிகளிலும், கைப்பெட்டிகளிலும் அவர் ஒளித்துவைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

6 மாதத்திற்கும் குறைந்த வயதுடைய மனிதக் குரங்குக் குட்டிகள், விலங்கு நல அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

போர்னியோ, சுமத்ரா தீவுகளைச் சேர்ந்த மனிதக் குரங்குகள் தென்கிழக்காசியாவிற்குள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு விற்கப்படுகின்றன.

காப்பாற்றப்பட்ட ஆமைகளில் பெரும்பாலானவை இந்திய நட்சத்திர ஆமை வகைகளைச் சேர்ந்தவை. அந்த ஆமை ஓடுகளின் மீது காணப்படும் நட்சத்திர வடிவம் பலரையும் கவரும் வகையில் அமைந்திருக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்