Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீன நாட்டினருக்கு விசா விதிமுறைகளை மேலும் கடுமையாக்கியது பாகிஸ்தான்

சீனாவைச் சேர்ந்தவர்களுக்கான விசா விதிமுறைகளைப் பாகிஸ்தான் மேலும் கடுமையாக்கியுள்ளது. குறிப்பாக வேலை, வர்த்தக விசாக்களுக்கான விதிமுறை மேலும் கடுமையாக்கப்பட்டதாகப் பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -

சீனாவைச் சேர்ந்தவர்களுக்கான விசா விதிமுறைகளைப் பாகிஸ்தான் மேலும் கடுமையாக்கியுள்ளது. குறிப்பாக வேலை, வர்த்தக விசாக்களுக்கான விதிமுறை மேலும் கடுமையாக்கப்பட்டதாகப் பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் பலுசிஸ்தானில் கொல்லப்பட்ட இரண்டு சீனர்கள் கிறிஸ்துவ சமயக் கொள்கைகளைப் பரப்ப முயன்றதாகப் பாகிஸ்தானிய உள்துறை அமைச்சு கூறியிருந்தது. கடத்தப்பட்ட 2 சீனர்களும் பலுசிஸ்தான் மாநிலத் தலைநகர் குவெட்டாவில் கொல்லப்பட்டதற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

அந்த இருவரின் செயல் வர்த்தக விசாக்களுக்கான விதிமுறைகளை மீறும் வகையில் இருந்ததாக உள்துறை அமைச்சு கூறியது.

விசாவுக்கு விண்ணப்பிப்போர்மீது பாகிஸ்தான் கூடுதலான சோதனை நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்