Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மராவியில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து கலந்துரையாட மலேசியா, இந்தோ, ஃபிலிப்பீன்ஸ் இன்று சந்திப்பு

ஃபிலிப்பின்ஸின் மராவி நகரில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து கலந்துரையாட இந்தோனேசியா, மலேசியா, ஃபிலிப்பீன்ஸ் ஆகியவை இன்று சந்திக்கின்றன.

வாசிப்புநேரம் -
மராவியில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து கலந்துரையாட மலேசியா, இந்தோ, ஃபிலிப்பீன்ஸ் இன்று சந்திப்பு

(படம்: Twitter/H20Comms)

ஃபிலிப்பின்ஸின் மராவி நகரில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து கலந்துரையாட இந்தோனேசியா, மலேசியா, ஃபிலிப்பீன்ஸ் ஆகியவை இன்று சந்திக்கின்றன.

மராவியின் தற்போதைய சூழல் இந்த வட்டாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் அந்த நாடுகள் பேசவிருக்கின்றன.

ஃபிலிப்பீன்ஸின் தென் பகுதியில் நிலவும் பயங்கரவாதப் பிரச்சினை தென்கிழக்காசியாவுக்குப் பரவாமல் இருப்பதைத் தடுப்பதற்கான முயற்சிகள் குறித்து திட்டமிட அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் எண்ணம் கொண்டுள்ளனர். 

அவர்கள், மணிலாவில் கூடவுள்ளனர். 

அந்த வட்டாரத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகக் கவலை நிலவும் வேளையில் சந்திப்பு நடக்கிறது.

ஐஎஸ் பயங்கரவாதிகளின் தொடர்புடைய மெளத் கிளர்ச்சியாளர்கள், மராவியில் தொடர்ந்து ஐந்து வாரமாகச் சண்டையிட்டு வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்