Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து: மன்னராட்சியை அவமதிக்கும் வகையிலான இணைய உள்ளடக்கத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

தாய்லந்தில் மன்னராட்சியை அவமதிக்கும் வகையிலான இணைய உள்ளடக்கத்துக்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -

தாய்லந்தில் மன்னராட்சியை அவமதிக்கும் வகையிலான இணைய உள்ளடக்கத்துக்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அத்தகைய உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்வோர் அல்லது பகிர்ந்துகொள்வோருடன் இப்போது, இப்போது அதனைப் பார்ப்பவர்களையும் அதிகாரிகள் குறிவைத்துள்ளனர்.

ஃபேஸ்புக், யூட்டியூப் போன்றவற்றில் அத்தயை உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்களை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பத்தைத் தாய்லந்துக் காவல்துறை பெறவிருக்கிறது.

மன்னராட்சியை அவமதிக்கும் வகையிலான இணைய உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்கள் ஏன் அதனை நாடுகின்றனர் என்பது குறித்தும் அதிகாரிகள் ஆராயவிருக்கின்றனர்.

ஆரம்பக் கட்டத்தில், சட்ட-ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று அவர்கள் கூறினர்.

அத்தகைய உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆலோசனையும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்