Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாட்டு நிறுவன சிறப்புத் தூதரை நியமிக்கவும் - பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு

பாகிஸ்தான் பிரதமர் ஷாஹிட் ககான் அபாஸி, காஷ்மீர் விவகாரத்தின் தொடர்பில் சிறப்புத் தூதர் ஒருவரை நியமிக்குமாறு, ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். 

வாசிப்புநேரம் -
காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாட்டு நிறுவன சிறப்புத் தூதரை நியமிக்கவும் - பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு

படம்: AP

பாகிஸ்தான் பிரதமர் ஷாஹிட் ககான் அபாஸி, காஷ்மீர் விவகாரத்தின் தொடர்பில் சிறப்புத் தூதர் ஒருவரை நியமிக்குமாறு, ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபையில் உரையாற்றியபோது அவர் அந்த அழைப்பை விடுத்தார்.

இந்தியாவிடமிருந்து முடிவற்ற பகைமைப் போக்கை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியா தான் இழைத்த கொடுஞ்செயல்களில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்ப முயன்றதாகத் திரு.அபாஸி குற்றஞ்சாட்டினார்.

காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதியான முறையில், நீதிமுறைப்படி, விரைந்து தீர்வுகாணப்பட வேண்டுமென்றார் அவர்.

பாகிஸ்தானுடன் அமைதி முயற்சிகளைத் தொடர, இந்தியா விரும்பாததால் ஜம்மு-காஷ்மீர் குறித்துப் பாதுகாப்பு மன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தனது தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

அந்தத் தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள், தங்கள் எதிர்காலம் குறித்து, ஐக்கிய நாட்டுக் கண்காணிப்பின்கீழ் சுதந்திரமாகப் பொதுவாக்கெடுப்பு ஒன்றில் வாக்களிக்க வேண்டும்.

இந்தியா அந்த வாக்கெடுப்பைத் தடுப்பதாகக் குறிப்பிட்ட திரு. அபாஸி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறும் இராணுவ நடவடிக்கையில் புதுடில்லி ஈடுபட்டால், தமது நாடு கடுமையான பதில் நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்