Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தானியக்க வங்கி இயந்திரத்தில் போலி நோட்டுகள்

இந்தியாவின் தெற்கு டில்லி வட்டாரத் தானியக்க வங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற ஆடவருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி.

வாசிப்புநேரம் -
தானியக்க வங்கி இயந்திரத்தில் போலி நோட்டுகள்

புது 2,000 ரூபாய் நோட்டுகள். (படம்: AFP)

இந்தியாவின் தெற்கு டில்லி வட்டாரத் தானியக்க வங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற ஆடவருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. அவர் எடுத்த நான்கு 2,000 ரூபாய் நோட்டுகளுமே போலியானவை.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமானது அந்தத் தானியக்க வங்கி இயந்திரம். அது விநியோகித்த போலி நோட்டுகளில் "ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா"வுக்குப் பதிலாக "சில்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா" என எழுதப்படிருந்தது.

அந்தப் போலி நோட்டுகள் குறைந்தது ஒன்பது விதமான வேற்றுமைகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. அவை இந்திய அரசாங்கத்தை ஏளனம் செய்யும் வகையில் அமைந்துள்ளன.

சம்பவத்தைக் குறித்துக் கருத்துத் தெரிவித்த வங்கி, எல்லா நோட்டுகளும் நவீன முறைகளைக் கொண்டு முழுமையாக சோதிக்கப்படுவதால், போலி நோட்டுகள் தானியக்க இயந்திரத்தில் விநியோகிக்கப்படுவது சாத்தியம் இல்லை என்று கூறியது.

போலி நோட்டுகளைக் கண்ட ஆடவர், உடனடியாக போலீசாருக்குத் தெரிவித்தார். அதையடுத்து அந்தத் தானியக்க வங்கி இயந்திரத்தின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

போலீசார் அதை மோசடிச் சம்பவமாகப் பதிவுசெய்துள்ளனர்.

அந்தத் தானியக்க இயந்திரத்தில் இறுதியாகப் பணம் நிரப்பிய ஆடவர், கண்காணிப்புக் கேமராப் பதிவின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்