Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிப்போருக்குக் கடுமையான தண்டனை

நச்சு பொருட்களை மண்ணுக்குள் கொட்டிச் சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிப்போருக்கு பெரும் அபராதம்   விதிக்கப்படலாம் எனச் சீனா தெரிவித்துள்ளது. சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் ஒருவருக்கு புதிய நிலப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்  293,000 அமெரிக்க டாலர் வரையிலான அபரதாம் விதிக்கப்படலாம். 

வாசிப்புநேரம் -
சீனாவில் சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிப்போருக்குக் கடுமையான தண்டனை

படம்: REUTERS/Stringer

நச்சு பொருட்களை மண்ணுக்குள் கொட்டிச் சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிப்போருக்கு பெரும் அபராதம்   விதிக்கப்படலாம் எனச் சீனா தெரிவித்துள்ளது. சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் ஒருவருக்கு புதிய நிலப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்  293,000 அமெரிக்க டாலர் வரையிலான அபரதாம் விதிக்கப்படலாம்.

பல ஆண்டுகளாய் நடைபெறும் சுரங்க வேலைகளால் பல தொழில்சார் கழிவுகளும், உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் நிலத்திற்குள் புகுந்து, சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவித்துள்ளன. சீனா சுற்றுப்புறப் பிரச்சினையைப் போக்க உறுதி பூண்டுள்ளது. அதற்கு அதிக செலவும் கூடுதல் கால அவகாசமும் தேவை என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய சட்டம், சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் முயற்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் நிதி வழங்கும். தேசிய அளவிலான கண்காணிப்புக் கட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் அது வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்