Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் : மலேசியாவில் சிறப்பு நீதிமன்றம்

பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாளும் சிறப்பு நீதிமன்றம் ஒன்று, மலேசியாவில் நிறுவப்பட்டுள்ளது. பிரதமர் திரு. நஜிப் ரசாக் அதனை அறிவித்தார்.

வாசிப்புநேரம் -
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் : மலேசியாவில் சிறப்பு நீதிமன்றம்

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் (படம்: REUTERS/Olivia Harris)

மலேசியா : பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாளும் சிறப்பு நீதிமன்றம் ஒன்று, மலேசியாவில் நிறுவப்பட்டுள்ளது. பிரதமர் திரு. நஜிப் ரசாக் அதனை அறிவித்தார்.

தென்கிழக்காசியாவில், அத்தகைய நீதிமன்றம் ஒன்று நிறுவப்படுவது இதுவே முதன்முறை. சிறப்பு நீதிமன்றத்தால், பிள்ளைகள் தொடர்பான பாலியல் வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியும் என்று அதன் தொடக்க விழாவில் திரு. நஜிப் சொன்னார்.

பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டம் 2017 விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். சிறப்பு நீதிமன்றம், தனது முதல் வழக்கை, அடுத்த மாதம் 4ஆம் தேதி விசாரிக்கத் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

பிள்ளைகளின் ஆபாசப் படங்களை வெளியிடுதல், பாலியல் தேவைக்காகப் பிள்ளைகளைத் தயார்ப்படுத்துதல், பிள்ளைகள் மீதான பாலியல் தாக்குதல்-போன்ற குற்றங்களை நீதிமன்றம் விசாரிக்கும்.

பிள்ளைகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுக்க நேர்ந்தால், அவர்களுக்குச் சிரமமில்லாமல் அதைப் பதிவு செய்வதில் உலகின் மற்ற நாடுகளில் நடப்பிலுள்ள சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று மலேசியப் பிரதமர் குறிப்பிட்டார். 

பிள்ளைகள் மீதான பாலியல் குற்ற வழக்குகளை, விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியத்தைத் திரு. நஜிப் வலியுறுத்தினார்.

எடுத்துக்காட்டாக, 16 வயதில் பாலியல் தாக்குதலுக்கு ஆளான ஒரு பதின்ம வயதுப் பிள்ளையின் வழக்கு விசாரணை 18 வயது வரை நீடித்தால், முக்கியமான ஆதாரங்கள் சிலவற்றை அந்தப் பிள்ளை மறந்துபோக வாய்ப்பிருப்பதை அவர் சுட்டினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்