Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து மருத்துவமனை வெடிப்பு: வெடிகுண்டுகள் முந்தைய வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டவை

தாய்லந்தின் ராணுவ மருத்துவமனையில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், இதற்கு முந்தைய வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டவை போன்று இருப்பதாகக் காவல்துறை கூறியிருக்கின்றது.

வாசிப்புநேரம் -
தாய்லந்து மருத்துவமனை வெடிப்பு: வெடிகுண்டுகள் முந்தைய வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டவை

(படம்: Reuters)

தாய்லந்தின் ராணுவ மருத்துவமனையில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், இதற்கு முந்தைய வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டவை போன்று இருப்பதாகக் காவல்துறை கூறியிருக்கின்றது.

ஏப்ரல், மே மாதங்களில் நடந்த தாக்குதல்களை அதிகாரிகள் அண்மைய தாக்குதலுடன் ஒப்பிட்டனர்.

பாங்காக்கின்இ Phramong Kutklao ராணுவ மருத்துவமனையில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் 24 பேர் காயமடைந்தனர்.
ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களும் சேவையில் இருப்பவர்களும் அந்த மருத்துவமனைக்குச் செல்வதுண்டு. அண்மைய தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை,

இருப்பினும், இதற்கு முன்னர் நடந்த இரண்டு தாக்குதல்களுக்குப் பொறுப்பான குழுவே இதற்கும் காரணம் என நம்புவதாக ராணுவத் தலைவர் சொன்னார்.

2014ஆம் ஆண்டு தாய்லந்து ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
அதன் மூன்றாவது ஆண்டு நிறைவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்குப் பிரச்சினை ஏற்படுத்துவதற்காக அந்தச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் கூறின. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்