Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஐ.நா.வின் தீர்மானங்களை வடகொரியா மீறக்கூடாது: சீனா வலியுறுத்தல்

வட கொரியா ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தீர்மானங்களை மீறக்கூடாது என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -

வட கொரியா ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தீர்மானங்களை மீறக்கூடாது என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாட்டுத் தீர்மானத்தை மீறி வட கொரியா ஏவுகணைச் சோதனைகளை நடத்துவதை எதிர்ப்பதாக சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் ஹுவா சுன்யிங் கூறினார். 

கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதிலும், அமைதியான முறையில் அணுவாயுதப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும் சீனா தொடர்ந்து பங்காற்றும் என்று அவர் சொன்னார். 

தனது இடைத்தொலைவு ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாய் அமைந்ததாக வட கொரியா நேற்று முன்தினம் அறிவித்தது. 

அந்த ஏவுகணை, ராணுவ நடவடிக்கையில் பயன்படுத்தப்படுவதற்குத் தயாராகவுள்ளது என்றும் அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்