Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மராவியில் எஞ்சியிருக்கும் மௌதி போராளிகளை அகற்றுவது சிரமம் - ஃபிலிப்பீன்ஸ் ஆயுதப் படை

ஃபிலிப்பீன்ஸின் மராவி நகரில் எஞ்சியிருக்கும் மௌதி போராளிகளை அகற்றுவது சிரமம் என்று ஃபிலிப்பீன்ஸ் ஆயுதப் படைத் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
மராவியில் எஞ்சியிருக்கும் மௌதி போராளிகளை அகற்றுவது சிரமம் - ஃபிலிப்பீன்ஸ் ஆயுதப் படை

படம்: REUTERS/Romeo Ranoco

ஃபிலிப்பீன்ஸின் மராவி நகரில் எஞ்சியிருக்கும் மௌதி போராளிகளை அகற்றுவது சிரமம் என்று ஃபிலிப்பீன்ஸ் ஆயுதப் படைத் தெரிவித்துள்ளது.

மராவி நகரில் உள்ள மௌதி போராளிகளுக்கும் ஐ.எஸ் அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஃபிலிப்பீன்ஸின் ஆயுதப்படைகளுக்கும் மௌதி போராளிகளுக்கும் இடையிலான சண்டை ஐந்தாவது வாரத்தைத் தொட்டுள்ளது.

முதன் முறையாக மௌதி போராளிகளை அகற்றுவது சிரமம் என்று ஆயுதப் படை கூறியுள்ளது.  மராவியில் சண்டை தொடங்கியது முதல் இதுவரை மிண்டானவ் தீவின் தென் வட்டாரத்தில் சந்தேகத்திற்குரிய குறைந்தது 276 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று நம்பப்படுகிறது.

மேலும் ராணுவ வீரர்கள், காவலர்கள், பொதுமக்கள் என சுமார் நூறு பேர் மாண்டதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்களில் இன்னமும் சுமார் 500 பேர் மராவி நகரில் சிக்கியிருப்பதாக ராணுவம் கூறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்