Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வளர்ச்சியை வலுப்படுத்த 2.5 பில்லியன் நிதி திரட்ட கிராப் நிறுவனம் திட்டம்

கிராப் நிறுவனம், தென்கிழக்காசியாவில் அதன் வளர்ச்சியை வலுப்படுத்த இரண்டரை பில்லியன் டாலர் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வளர்ச்சியை வலுப்படுத்த 2.5 பில்லியன் நிதி திரட்ட கிராப் நிறுவனம் திட்டம்

(படம்: Reuters)

கிராப் நிறுவனம், தென்கிழக்காசியாவில் அதன் வளர்ச்சியை வலுப்படுத்த இரண்டரை பில்லியன் டாலர் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது.

Uber Technolgies நிறுவனத்தின் போட்டியைச் சமாளிக்கும் முயற்சியாகவும் அது கருதப்படுகிறது.

தென்கிழக்காசியாவிலேயே, ஒரே நேரத்தில் ஆக அதிகமாக இரண்டரை பில்லியன் டாலர் நிதி திரட்டும் நிறுவனமாகத் திகழ கிராப் எண்ணம் கொண்டுள்ளது.

Didi Chuxing பயணப் பகிர்வுப்போக்குவரத்து நிறுவனமும், ஜப்பானியத் தொலைதொடர்பு, இணையச் சேவைகளை வழங்கும் SoftBank குழும நிறுவனமும் கிராப் நிறுவனத்தில் 2 பில்லியன் டாலர் வரை தொடர்ந்து முதலீடு செய்ய முன்வந்துள்ளன.

கிராப் நிறுவனத்தின் மதிப்பு ஆறு பில்லியன் டாலருக்கும் அதிகமாகக்கூடும் எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள கிராப் தலைமையகம், தென் கிழக்காசியாவின் சந்தைப் பங்குகளில் 95 விழுக்காட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்