Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

மியன்மாரைப் பாதித்துள்ள வெள்ளத்தில் இருவர் மாண்டதுடன் 100,000 பேருக்கு மேல் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
மியன்மார் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

(படங்கள்: Reuters)

மியன்மாரைப் பாதித்துள்ள வெள்ளத்தில் இருவர் மாண்டதுடன் 100,000 பேருக்கு மேல் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டுள்ளது. கடும் வெள்ளம் ஆற்றங்கரையோரம் உள்ள பௌத்த வழிபாட்டுத் தலத்தையும் அடித்துச் சென்றுள்ளது.

இம்மாதம் தொடங்கிய பருவ மழையால் வெள்ள நீர் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதனால் பலர் மேட்டுப்பாங்கான பகுதிகளுக்குச் செல்ல நேரிட்டுள்ளது. பலர் பௌத்த வழிபாட்டுத் தலங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இனி நடப்பது வானிலையைப் பொறுத்தது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சுமார் 117,000 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்குவதோடு சில பகுதிகளில் தங்குமிட வசதிகளையும் அரசாங்கம் அமைத்துவருகிறது.

மாண்டவர்களில் ஒருவர் வெள்ள நீரில் மூழ்கியதாகவும் மற்றொருவர் ஏரியைக் கடக்கும் போது அதன் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

யாத்திரிகர்களை ஈர்க்கும் பிரபல வழிபாட்டுத் தலம் ஒன்று தற்போது நீருக்கு அடியில் உள்ளது.

இவ்வாண்டு பெய்யும் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளம் பல நிலப்பகுதிகளை அடித்துச் சென்றுள்ளது. பாதிக்கப்பட்ட கிராமவாசிகளில் பலர் மீண்டும் கரையோரமாக வசிக்க அஞ்சுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்