Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் அபாயகர வெப்பம்

உலகின் பல பகுதிகள் வழக்கமான வெப்பநிலையைவிட அதிகச் சூடாகக் காணப்படுகின்றன.இந்தியா அதற்கு விதிவிலக்கல்ல.  அங்கு ஒவ்வொரு கோடைக்காலத்திலும் அதிகமான வெப்பக்காற்றால் பலர் மடிகின்றனர்.கடந்த நான்காண்டுகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -

இந்தியாவில் வெப்பம் அபாயகரமானது.

இந்த ஆண்டு இரண்டு மாதங்களில் மட்டும் 200 பேர் மரணமடைந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை வெப்பம் தொடர்பான மரணங்களைச் சமாளிக்க எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவில் நடப்பில் இல்லை.
2015இல் 2,000க்கும் அதிகமானோர் மாண்டதைத் தொடர்ந்து நிலைமை மாறியது.
ஒவ்வொரு நாளும் தேசிய அளவில் வெப்பக்காற்று ஆலோசனை வழங்கப்படுகிறது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும், தண்ணீர் அதிக அளவில் அருந்தும்படியும் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அடுத்த ஆண்டுக்குள் வெப்பக்காற்று மரணங்கள் நிகழவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது இந்தியா.வெப்பக்காற்றால் இந்தியாவில் ஏழை மக்கள்தான் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
வீடில்லாதவர்கள், பிழைப்புக்காக வெயிலில் வேலை செய்பவர்கள் ஆகியோர் அதில் அடங்குவர்.அரசாங்கத்தின் பணிகள் போதாத சூழலில் சிலர் தாங்களாகவே உதவ முன்வருகின்றனர்.

உலக வெப்பமயமாதல் அதிகரிக்க அதிகரிக்க அரசாங்கத்தின் மீதான நெருக்கடியும் அதிகரித்து வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்