Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளில் பணி புரியும் மருத்துவர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தத்தால், பல்லாயிரம் நோயாளிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் ஆகப் பெரிய மருத்துவத் தொழிற்சங்கம், நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியது.

வாசிப்புநேரம் -
இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

(படம்: AFP)

இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளில் பணி புரியும் மருத்துவர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தத்தால், பல்லாயிரம் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் ஆகப் பெரிய மருத்துவத் தொழிற்சங்கம், நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியது.

2008-டில் தொடங்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றை உடனடியாக மூடவேண்டும் என்பது, அதன் முக்கியக் கோரிக்கை. தரமான மருத்துவக் கல்வியை அந்தக் கல்லூரி வழங்கவில்லை என்பது, அரசாங்க மருத்துவர்களின் குற்றச்சாட்டு. மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால், வசதி குறைந்தவர்களே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கிவந்தபோதும், அங்கு சிகிச்சைபெற அவர்களுக்கு வசதியில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளைக்கூட, அரசாங்க மருத்துவமனைகள் திருப்பியனுப்பி வருவதாக, உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்