Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வியட்நாமின் மீன்பிடிப் படகுகளைத் தடுத்த இந்தோனேசியா

இந்தோனேசியாவின் கடல்துறை அதிகாரிகள், வியட்நாமின் மீன்பிடிப் படகுகள் ஐந்தைத் தடுத்து வைத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவின் கடல்துறை அதிகாரிகள், வியட்நாமின் மீன்பிடிப் படகுகள் ஐந்தைத் தடுத்து வைத்துள்ளனர்.
இந்தோனேசியக் கடற்பகுதியில் அந்தப் படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடித்த சந்தேகத்தில் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆயினும், சிறிது நேரத்தில் வியட்நாமியக் கடலோரக் காவல்படைப் படகு தலையிட்டு மீனவர்களில் பெரும்பாலோரை விடுவித்ததுடன் இந்தோனேசிய மீன்வளத்துறை அதிகாரி ஒருவரைக் கைது செய்ததாக இந்தோனேசியா தெரிவித்தது. கடலோரக் காவல்படையின் உதவியுடன்

மீனவர்களில் 44 பேர் தப்பினர்.

11 பேரை இந்தோனேசியா தடுத்துவைத்துள்ளதாக இந்தோனேசியாவின் மீனவள, கடல்துறை விவகார அமைச்சு தெரிவித்தது.

வியட்நாமியக் கடலோரக் காவல்படை தலையிட்டதைத் தொடர்ந்து மீனவர்களின் படகு ஒன்று மூழ்கியதாக அமைச்சு கூறியது.

அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் இருதரப்பும் அது குறித்து விசாரணை நடத்தும் என்றும் அமைச்சு கூறியது. இருந்தபோதும், மீன்பிடிப் படகில் இந்தோனேசிய அதிகாரி இருந்தபோது வியட்நாமியக் கப்பல் அதன் மீது மோதியதாக வேறு சில தகவல்கள் குறிப்பிடுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்