Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவில் அணுமின் உலை திறக்கப்படலாம்

2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவில் அணுமின் உலை திறக்கப்படலாம் என்று மலேசிய அணுச்சக்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

கோலாலம்பூர், மலேசியா: 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவில் அணுமின் உலை திறக்கப்படலாம் என்று மலேசிய அணுச்சக்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மலேசியாவில் அதிகரித்துவரும் மின்சாரத் தேவையை ஈடுகட்ட, அணுமின் உலை அவசியம் என நிறுவனம் கூறியது.

மலேசியாவின் மொத்த மின் உற்பத்தியில், 52 விழுக்காடு நிலக்கரியிலிருந்தும் 45 விழுக்காடு எரிவாயுவிலிருந்தும் 3 விழுக்காடு நீர் மின்சாரத்திலிருந்தும் கிடைக்கிறது.

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தாத, பாதுகாப்பான மின்சார உற்பத்திக்கு அணுமின் உலைகள் பயன்பட்டு வருவதை, நிறுவனம் சுட்டியது.

அணுமின் உலை அமைப்பது குறித்த மூன்று கட்டங்களில் இப்போது முடிவெடுக்கும் முதல்கட்டத்தில் மலேசியா இருப்பதாக அது தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்