Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவைக் குறைகூறும் வடகொரியா

சீனா அமெரிக்காவின் பேச்சை கேட்டு, வடகொரிய நிலக்கரிகளின் இறக்குமதியை நிறுத்தியிருப்பதாக வடகொரியா குறைகூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

சீனா அமெரிக்காவின் பேச்சை கேட்டு, வடகொரிய நிலக்கரிகளின் இறக்குமதியை நிறுத்தியிருப்பதாக வடகொரியா குறைகூறியுள்ளது.

சமூகச் செயல்முறைகளைப் பாதிப்பதற்கான சதித்திட்டத்தில் பெய்ச்சிங் பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாக வடகொரியா சாடியது.

நட்பார்ந்த நாடாகக் கருதப்படும் அண்டை நாடு அத்தகைய மனிதநேயமற்ற நடவடிக்கையை எடுத்திருப்பதாக ஊடகத்தில் தகவல் வெளியிடப்பட்டது. 

சுமார் ஒருவாரத்துக்கு முன்னதாக கரி இறக்குமதிக்கான தடை குறித்த அறிவிப்பு வெளிவந்தது. இந்த ஆண்டு இறுதிவரை அந்தத் தடை நடப்பில் இருக்கும்.

வடகொரியாவின் அண்மைய ஏவுகணைச் சோதனைக்குப் பதில் நடவடிக்கையாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தடைகளை விதித்தது.

அவற்றுள் ஒன்று சீனாவின் தடை. எனினும் நிலைமையைக் காரணம் காட்டி, சீனா தமது எதிரிகளுடன் கைகோர்த்திருப்பதாக வடகொரியா குற்றஞ்சாட்டியது.

வர்த்தக ரீதியாக, வடகொரியா சீனாவை அதிகம் சார்ந்துள்ளது. கடந்த ஆண்டு, வடகொரியாவிலிருந்து சீனாவுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான கரிகள் விற்கப்பட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்