Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸில் போதைப்பொருள் கும்பலிடமிருந்து பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது

பிலிப்பீன்ஸில் போதைப்பொருள் கும்பலிடம் இருந்து பணம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட செனட்டர் லெலா டெ லிமா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸில் போதைப்பொருள் கும்பலிடம் இருந்து பணம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட செனட்டர் லெலா டெ லிமா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போதைபொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவரும் அதிபர் ரொட்ரிகோ டுடார்ட்டேவை, திருவாட்டி டெ லிமா கடுமையாக விமர்சித்துள்ளார். 

2010-ஆம் ஆண்டிலிருந்து 2015-ஆம் ஆண்டுவரை நீதித் துறை செயலாளராகப் பணியாற்றியபோது, திருவாட்டி டெ லிமா, சட்டத்துக்குப் புறம்பான போதைப்பொருள் வர்த்தகத்துக்குத் துணைபோனதாகக் கூறப்படுகிறது. 

இன்று காலை, அவரது அலுவலகத்தில் அவர் கைதுசெய்யப்பட்டார். 

கைது நடவடிக்கையின்போது, சுயமாகவே அதிகாரிகளுடன் தாம் செல்லத் தயார் எனச் செய்தியாளர்களிடம் திருவாட்டி  டெ லிமா சொன்னார். 

நீதியையும் உண்மையையும் நிலைநாட்டுவதில் தாம் மேலும் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையில் தாம் ஈடபடவில்லை என்றும் சென்னட்டர் டெ லிமா சொன்னார்.

அவரின் கைது நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்ட முடிவு என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

எனினும், அவரைக் கைதுசெய்வதற்கான போதிய காரணங்கள் இருப்பதாக நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்