Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்

ஜப்பானின் மத்தியப் பகுதியை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. இன்று காலை நேர்ந்த அந்தப் பேரணியில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்

வாசிப்புநேரம் -
ஜப்பானின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்

(படம்: Channel News Asia)

ஜப்பானின் மத்தியப் பகுதியை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. இன்று காலை நேர்ந்த அந்தப் பேரணியில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.

சிங்கப்பூர் நேரப்படி, இன்று காலை 6.02 மணிக்கு நேர்ந்த அந்த நிலநடுக்கம், நகானோ (Nagano) மாநிலத்தில் உள்ள Ina நகருக்கு மேற்கு திசையில், 30 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு 10 கிலோமீட்டர் அடியிலும் மையம் கொண்டதாக, அமெரிக்க பூகோள ஆய்வு குறிப்பிட்டது.

உடனடி சேதம் ஏற்படாத நிலையில், எந்தவித சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை என்று ஜப்பானிய வானிலை நிலையம் தெரிவித்தது. ஜப்பானின் அணு மின் நிலையங்களிலும் எவ்விதப் பிரச்சனைகளும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். ஆனால், ஜப்பானின் மத்தியப் பகுதியில் ரயில் சேவைகள் மட்டும் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

ஜப்பான் நான்கு பூமித் தகடுகளுக்கு நடுவில் அமையப் பெற்றிருப்பதால், ஆண்டுதோறும், அங்கு பல நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம். அதன் காரணமாக, அங்கு முறைய கட்டடக் கோட்பாடுகளும், வலுவான சட்டதிட்டங்களும் அவசியமாகின்றது. இல்லையெனில், அத்தகைய நிலநடுக்கங்கள் ஏற்படும் போது, அங்கு பெரும் சேதம் ஏற்படக்கூடும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்