Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாக்கிஸ்தான் லாரி வெடிப்பில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்க சிரமப்படும் மருத்துவமனைகள்

பாக்கிஸ்தானில் எண்ணெய் லாரி வெடிப்புச் சம்வத்தில் காயமுற்றோருக்குச் சிகிச்சை வழங்க மருத்துவமனைகள் சிரமப்பட்டுவருகின்றன.

வாசிப்புநேரம் -
பாக்கிஸ்தான் லாரி வெடிப்பில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்க சிரமப்படும் மருத்துவமனைகள்

(படம்: Reuters)

பாக்கிஸ்தானில் எண்ணெய் லாரி வெடிப்புச் சம்வத்தில் காயமுற்றோருக்குச் சிகிச்சை வழங்க மருத்துவமனைகள் சிரமப்பட்டுவருகின்றன.

நோன்புப் பெருநாள் அன்று நடந்த அசம்பாவிதத்தில் 146 பேர் மாண்டனர், 118க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சக்கரம் வெடித்து கவிழ்ந்த லாரியிலிருந்து வழிந்த பெட்ரோலைப் பாத்திரங்களில் பிடிக்கப் பொதுமக்கள் திரண்டபோது லாரி வெடித்தது.

அங்கிருந்த ஒருவர் புகைபிடிக்க நெருப்புப் பற்ற வைத்ததே வெடிப்புக்குக் காரணம் என சம்பவ இடத்திலிருந்த சிலர் கூறுகின்றனர்.

லாரி கவிழ்ந்த சுமார் 45 நிமிடம் கழித்தே வெடிப்பு நேர்ந்தது.

தீயில் கருகிய சடலங்களை அடையாளம் காண மரபணுச்சோதனை நடந்து வருகிறது.

மாண்டவர்களில் குறைந்தது 20 பேர் சிறுவர்கள்.

விபத்து நடத்த பஹவல்பூர் நகரின் அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாததால் தீக் காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மற்ற மருத்துமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வெடிப்பில் உயிர் தப்பிய எண்ணெய் லாரி ஓட்டுநர் விசாரணைககுக்காகத் தடுத்து வைக்கப்படுள்ளார். ஆனால் சம்பவம் மனிதத் தவறு அல்ல என காவல்துறையினர் நம்புகிறனர்.

பெட்ரோல் பிடிக்கத் திரண்ட பொதுமக்களை "அவ்வாறு செய்யவேண்டாம், எந்நேரமும் லாரி வெடிக்கலாம்" என்று ஓட்டுநர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

கிராமவாசிகள் அதைப் பொருட்படுத்தவில்லை.

ஆனாலும் கவிழ்ந்த லாரியிலிருந்து மக்கள் எண்ணெய் எடுக்கச் சென்ற போது அங்கிருந்த காவல்துறையினர் ஏன் கூட்டத்தைக் கலைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து லண்டனில் தமது பேரனின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற பாக்கிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷாரிஃப், காயமடைந்தவர்களைச் சந்திக்க நாடு திரும்பியுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்