Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அமெரிக்கத் தற்காப்பு ஏவுகணைகளை எதிர்த்து போராடும் தென் கொரியர்கள்

தென் கொரியாவில், ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகே பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
அமெரிக்கத் தற்காப்பு ஏவுகணைகளை எதிர்த்து போராடும் தென் கொரியர்கள்

(படம்: AFP)

தென் கொரியாவில், ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகே பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தென் கொரியா மீது வலுக்கட்டாயமாக திணிக்க முற்படும் சர்ச்சைக்குரிய தற்காப்பு ஏவுகணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அந்த ஒப்பந்தம் குறித்து தென் கொரியாவும் அமெரிக்காவும் இணக்கம் தெரிவித்ததை அடுத்து நடத்தப்படும் ஆகப் பெரிய ஆர்ப்பாட்டப் பேரணி அது. அந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 4,000 பேர் கலந்துகொண்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர், அந்த சர்ச்சைக்குரிய தற்காப்பு ஏவுகணை பயன்படுத்தப்படவிருக்கும் சியோங்ஜூ (Seongju) வட்டாரத்தில் வசிப்பவர்கள்.

அந்த ஏவுகணை, சுகாதார மற்றும் சுற்றுப்புற கேடு விளைவிக்கூடிய தன்மை வாய்ந்தது என்றும், அதன் காரணமாக, வட கொரியாவுடனான உறவு மேலும் மோசமடையும் என்றும் தென் கொரிய மக்கள் அக்கறை தெரிவித்தனர்.

தென் கொரியாவின் புதிய அதிபரான திரு மூன் ஜே இன் (Moon Jae In), அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவிருக்கும் வேளையில், அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்