Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வலைப்பதிவாளரின் குடியுரிமையை ரத்து செய்த வியட்நாமிய அரசாங்கம்

 வியட்நாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு -  வியட்நாமிய வலைப்பதிவாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவை அந்நாட்டு அரசாங்கம் பிறப்பித்துள்ளது. அதன்படி, முன்னாள் அரசியல் கைதியான 62-வயது ஃபாம் மின் ஹோங்கின் (Pham Minh Hoan),குடியுரிமை, அண்மையில் ரத்து செய்யப்பட்டது.

வாசிப்புநேரம் -
வலைப்பதிவாளரின் குடியுரிமையை ரத்து செய்த வியட்நாமிய அரசாங்கம்

(படம்: AFP)

 வியட்நாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு -  வியட்நாமிய வலைப்பதிவாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவை அந்நாட்டு அரசாங்கம் பிறப்பித்துள்ளது. அதன்படி, முன்னாள் அரசியல் கைதியான 62-வயது ஃபாம் மின் ஹோங்கின் (Pham Minh Hoang),குடியுரிமை, அண்மையில் ரத்து செய்யப்பட்டது.

 வியட்நாமின் அண்மை வரலாற்றில், ஒருவரின் குடியுரிமை ரத்து செய்யப்படுவது அதுவே முதல்முறை. 2011-ஆம் ஆண்டு, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில், அவர் தண்டிக்கப்பட்டார். அப்போது, அவர்  வியட்நாமிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தில், பலதரப்பட்ட செய்திகளை வெளியிட்டார்.

அதற்காக அவர் 17-மாத சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அதனை அடுத்து, அவர் மூன்று ஆண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும், அவர் தொடர்ந்து, சமூக ஊடகங்களின் வழி, அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வந்ததால், அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர் நாடு கடத்தப்படுகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்