Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆடவரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய ராணுவ அதிகாரிக்கு விருது

இந்தியாவில், குடிமகன் ஒருவரை மனிதக் கேடயமாக வாகனத்தில் கட்டிவைத்ததாகக் கூறப்படும் இராணுவ அதிகாரிக்கு விருது வழங்கப்பட்டிருப்பதைப் பாகிஸ்தான் கண்டித்துள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியாவில், குடிமகன் ஒருவரை மனிதக் கேடயமாக வாகனத்தில் கட்டிவைத்ததாகக் கூறப்படும் இராணுவ அதிகாரிக்கு விருது வழங்கப்பட்டிருப்பதைப் பாகிஸ்தான் கண்டித்துள்ளது.

அது மனிதாபிமானத்துக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்றுகூறி, பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது.

வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் திரு. நஃபீஸ் சக்காரியா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பாகிஸ்தானின் கண்டனத்தை வெளியிட்டார்.

கடந்த மாதம் 9ஆம் தேதி, ஸ்ரீநகர் சட்டமன்றத் தேர்தலின்போது, சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்தது. 

கல்லெறியும் சம்பவங்களால் பாதுகாப்பின்றிக் காணப்பட்ட நிலைமையைச் சமாளிக்க, பொதுமக்களில் ஒருவரை இந்திய அதிகாரி மேஜர் லீத்துல் கோகோய், இராணுவ வாகனத்தின் முன்புறத்தில் கட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது. 

அந்தச் சம்பவம் பலத்த குறைகூறலுக்கு உள்ளானது.

அந்த அதிகாரிக்கு, நேற்றுமுன்தினம், மெச்சத்தக்க விருதை இந்திய இராணுவம் வழங்கியது. 

பிரிவினைவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் வட்டாரத்தில், தொடர்ந்து சிறந்த சேவையாற்றியதன் பொருட்டு, அந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு விருது வழங்குவது குற்றம் என்று வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்