Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிரபல நோன்புப் பெருநாள் பாடலைப் பிரசங்கத்தின் பின் வாசித்த தேவாலயம்

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்று, நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிரபல நோன்புப் பெருநாள் பாடலைப் பிரசங்கத்தின் பின் வாசித்ததால் சமூக ஊடங்கங்களில் பாராட்டுப் பெற்று வருகிறது.

வாசிப்புநேரம் -
பிரபல நோன்புப் பெருநாள் பாடலைப் பிரசங்கத்தின் பின் வாசித்த தேவாலயம்

(படம்: Facebook)

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்று, நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிரபல நோன்புப் பெருநாள் பாடலைப் பிரசங்கத்தின் பின் வாசித்ததால் சமூக ஊடங்கங்களில் பாராட்டுப் பெற்று வருகிறது.

தேவாலயத்தில் பாடலுக்கு இசை வாசிக்கப்படும் காணொளி Facebookகில் பரவி வருகிறது.

அது கிட்டத்தட்ட 30,000 முறை பகிரப்பட்டுள்ளது.

நோன்புக் காலத்தில் வெவ்வேறு மதங்களிடையே இருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் நல்லிணக்கத்தைக் காட்டவும் பாடல் வாசிக்கப்பட்டது என தேவாலய இசைக் குழுத் தலைவர் திரு. ஹாரி வாங் கூறினார்.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களில் அவர்களும் ஈடுபட பாடல் ஒரு வாய்ப்பு என கூறினார் அவர்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் பழக்கங்களை மற்ற தேவாலயங்களும் கடைபிடிக்கலாம் என சொன்னார் திரு. வாங்.

இது போன்ற செயல்கள் சபாவில் வாழும் வெவ்வேறு இனத்தவரிடையே உறவை வலுப்படுத்துகிறது என்று சமூக ஊடங்களில் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்