Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ள மராவி நகரிலிருந்து 5 பேர் மீட்பு

 பிலிப்பீன்ஸில் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ள மராவி நகரிலிருந்து, குறைந்தது ஐந்து பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ள மராவி நகரிலிருந்து 5 பேர் மீட்பு

(படம்: AP/Aaron Favila)

பிலிப்பீன்ஸில் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ள மராவி நகரிலிருந்து, குறைந்தது ஐந்து பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.   பிலிப்பீன்ஸ் இராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த போராட்டத்தின் இடையே, நோன்புப் பெருநாளை அனுசரிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தத்தின் இடையே அந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எட்டு மணி நேரம் நீடித்த சண்டை நிறுத்தத்தின் போது, ஒரு குழந்தை உள்ளிட்ட, குறைந்தது ஐந்து பேர் மராவி நகரிலிருந்து மீட்கப்பட்டனர்.அந்த சண்டை நிறுத்தத்தின் போது, பிலிப்பீன்ஸ் மீட்புக் குழுவினரும் தூதவர்களும் போர் நடைபெறும் பகுதிக்குள் நுழைந்தனர்.

அப்போது அவர்கள் அங்கிருந்த Maute பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரை சந்தித்துப் பேசினர்.   ஆனால், அவர்கள் பேசிய விவரங்கள் குறித்து இன்னும் அறியப்படவில்லை.

அதனை அடுத்து, பொதுமக்கள் ஐவர் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பிலிப்பீன்ஸ் இராணுவம் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்