Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் 140 மில்லியன் இணைய மோசடி: 44 பேர் கைது

சீனாவில், இணைய மோசடியில் ஈடுபட்டிருந்த 44 பேரை அந்நாட்டுக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
சீனாவில் 140 மில்லியன் இணைய மோசடி: 44 பேர் கைது

( படம் : AFP )

சீனாவில், இணைய மோசடியில் ஈடுபட்டிருந்த 44 பேரை அந்நாட்டுக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

மோசடிக்காரர்கள் 140 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள தொகையைப் பிறரிடம் இருந்து ஏமாற்றி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

1949ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும், அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதாகவும் ஒரு கும்பல் கூறியது.

அதனை நம்பி, சுமார் 93,000 பேர் அதற்கு நிதி வழங்கினர்.
We-chat போன்ற சமூகத் தொடர்பு ஊடகங்கள் மூலம், கிட்டத்தட்ட 2 வெள்ளி தொகையை உறுப்பியமாக வழங்க, அந்தக் கும்பல் மக்களைக் கேட்டுக்கொண்டது.

அந்தச் சொத்துக்களை மீண்டும் பெற்ற பிறகு, அதற்குக் கைமாறாக அவர்களுக்குச் சுமார் பத்தாயிரம் வெள்ளி திரும்பக் கிடைக்கும் என்று அந்தக் கும்பல் கூறி ஏமாற்றியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்