Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த வியட்நாமிய ஆடவர் மரணம்

ஜப்பானில், குடிநுழைவுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த வியட்நாமிய ஆடவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த வியட்நாமிய ஆடவர் மரணம்

படம்: REUTERS/Dario Pignatelli

ஜப்பானில், குடிநுழைவுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த வியட்நாமிய ஆடவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தடுப்புக் காவல் நிலையத்தின்மீது கவனம் செலுத்த வேண்டியத் தேவையை அண்மைய சம்பவம் வலியுறுத்துவதாகக் கவனிப்பாளர்கள் கூறினர்.

ஆடவரின் மரணம் குறித்து வழக்குரைஞர் உட்பட ஆறு பேர் தகவல் அளித்திருந்தனர்.

உயிர் நீத்த நபரின் பெயர் Van Huan Nguyen எனக் கூறப்பட்டது. நாற்பது வயது மதிக்கத்தக்க அவர் எதற்காக, எத்தனை காலம் அந்தத் தடுப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அவருக்கு ஜப்பானில் உறவினர்கள் யாரும் இல்லை என்றும் நண்பர்கள் பலர் இருந்தனர் என்றும் அவருக்கு நெருக்கமான  வட்டாரங்கள் கூறினர்.

தடுப்புக் காவலில் தனியாக இருந்த அவர், பேச்சு மூச்சின்றி கண்டெடுக்கப்பட்டதாக,  Sankei நாளேடு தெரிவித்தது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பிறகு அவர் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டது.

2014ஆம் ஆண்டு அதே வளாகத்தில் இருவர் மாண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்