Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

எவரஸ்ட் சிகரத்துக்கு அருகில் விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்

இமயமலையின் எவரஸ்ட் சிகரத்துக்கு அருகில் சரக்கு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.  எவரஸ்ட்டுக்கு அருகிலுள்ள லுக்லா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்து நேர்ந்தது.

வாசிப்புநேரம் -
எவரஸ்ட் சிகரத்துக்கு அருகில் விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்

(படம் : ராய்ட்டர்ஸ்)

இமயமலையின் எவரஸ்ட் சிகரத்துக்கு அருகில் சரக்கு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. எவரஸ்ட்டுக்கு அருகிலுள்ள லுக்லா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்து நேர்ந்தது.

விமானச் சிதைவுகளிலிருந்து, 2 விமானிகளும் பெண் பணியாளர் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். மூவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

கடுமையான பனிமூட்டத்திற்கு இடையில் லுக்லா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற அந்த விமானம், மூன்று பாகங்களாக உடைந்தது.
விபத்துக்கான காரணம் முழுமையாக உறுதிசெய்யப்படவில்லை. லுக்லா விமான நிலையம் உலகின் ஆக ஆபத்தான விமான நிலையமாகக் கருதப்படுகிறது.

மலையேறிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் அந்த விமான நிலையத்தின் வழியாகவே இமயமலைக்குச் செல்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்