Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவின் ஆக நீளமான பாலம் - சீனாவின் எல்லைப்பகுதிக்கு அருகில்

இந்தியா, தனது ஆக நீளமான பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியா, தனது ஆக நீளமான பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தாம் ஆட்சிக்கு வந்ததன் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, 9.1 கிலோமீட்டர் நீளமுள்ள பாலத்தை, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Dhola-Sadiya என்று பெயரிய அந்தப் பாலம், அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை இணைக்கிறது.

புதிய பாலம், 60 டன் கவச வாகனங்களைத் தாங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
பணத்தையும் நேரத்ததையும் மிச்சப்படுத்துவதோடு அந்தப் பாலம் அசாமில் புதிய பொருளியல் எழுச்சியையும் ஏற்படுத்தும் என்று திரு. மோடி கூறினார்.

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அசாம் சந்தைகளுக்குக் கொண்டு செல்லப் பாலம் பயன்படும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்