Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் ஐ.எஸ் சந்தேக நபர்கள் 6 பேர் கைது

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 6 ஆடவர்களை மலேசியக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

வாசிப்புநேரம் -

கோலாலம்பூர்: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 6 ஆடவர்களை மலேசியக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இம்மாதம் (மே) 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை அந்தக் கைதுகள் நடந்ததாகக் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதானவர்களில், கிளந்தானைச் சேர்ந்த முகமது முஸாஃபா அரீப் ஜுனைடி என்ற நபர் தானாக முன்வந்து அதிகாரிகளிடம் சரணடைந்தார்.

சட்டவிரோத ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அவர் தென் தாய்லந்துக்குத் தப்பி ஓடியதாகப் போலீசார் அறிவித்திருந்தனர்.
அத்துடன், 2 சகோதரர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

சகோதரர்களில் ஒருவர் பேராக்கில் சமய போதகராகவும், மற்றொருவர் கெடாவில் வர்ததகராகவும் இருந்தவர்கள்.

சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கிய சந்தேகத்தின் பேர் அவர்கள் பிடிபட்டனர்.

இம்மாதத்தின் முற்பகுதியில் ஐ.எஸ் சந்தேக நபர்கள் 6 பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்