Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரிய ஏவுகணைச் சோதனை தோல்வி?

வடகொரியா நடத்திய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை தோல்வியுற்றதுபோலத் தெரிவதாகக் கூறப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
வடகொரிய ஏவுகணைச் சோதனை தோல்வி?

படம்: AFP

வடகொரியா நடத்திய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை தோல்வியுற்றதுபோலத் தெரிவதாகக் கூறப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அந்தச் சோதனை நடத்தப்பட்டது.

தென் கொரிய ராணுவம், பியொங்யாங், வடக்குப் பகுதியிலிருந்து ஏவுகணையைப் பாய்ச்சிருப்பதாகக் கூறியதாய் Yonhap செய்தி நிறுவனம் சொன்னது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம், ஏவுகணைச் சோதனைகளுக்கு எதிராய் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் அண்மைய சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகளை நிறுத்த ஐக்கிய நாட்டு நிறுவனம் தவறினால், கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அண்மையில் எச்சரித்திருந்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்