Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஃபிலிப்பீன்ஸில் குண்டுவெடிப்பு - 11 பேர் காயம்

ஃபிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 11 பேருக்குக் காயமேற்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
ஃபிலிப்பீன்ஸில் குண்டுவெடிப்பு - 11 பேர் காயம்

3 செப்டம்பர் 2016-இல் ஃபிலிப்பீன்ஸ் டாவோ நகரில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் மாண்டோருக்கு அஞ்சலி (படம்: REUTERS/Lean Daval Jr)

ஃபிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 11 பேருக்குக் காயமேற்பட்டுள்ளது.

இன்று நடக்கவிருக்கும் ஆசியான் மாநாட்டுக்கும் வெடிப்புச் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கியாபோவில் க்யூசோன் புலவார்ட் நெடுஞ்சாலையில் வெடிப்புச் சம்பவம் நடந்தது.

நாட்டுவெடிகுண்டுகளால் வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினார்.

காயமடைந்தோரில் இருவரின் உடல் நிலை மோசமாய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்த பாதுகாப்புக் கேமரப் படக்காட்சிகளைச் சோதித்து வருவதாகப் புலனாய்வாளர்கள் கூறினர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்