Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ரக்கைன் வன்செயலால் முதல் மாதத்தில் மட்டும் குறைந்து 6,700 பேர் பலி

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் வன்செயல் மூண்டபோது, முதல் மாதத்தில் மட்டும் குறைந்து 6,700 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக "எல்லைகள் இல்லா மருத்துவர்கள்" அமைப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ரக்கைன் வன்செயலால் முதல் மாதத்தில் மட்டும் குறைந்து 6,700 பேர் பலி

படம்: AFP/Dibyangshu SARKAR

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் வன்செயல் மூண்டபோது, முதல் மாதத்தில் மட்டும் குறைந்து 6,700 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக "எல்லைகள் இல்லா மருத்துவர்கள்" அமைப்பு தெரிவித்துள்ளது.

தான் மேற்கொண்ட ஆறு ஆய்வுகளின் முடிவில் அது தெரிய வந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

ரொஹிஞ்சா அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 2, 400 குடும்பங்களிடம் அந்த ஆய்வு ஒரு மாதம் மேற்கொள்ளப்பட்டது.

மாண்டவர்களில் சுமார் 69 விழுக்காட்டினர் துப்பாக்கியால் சுடப்பட்டு மாண்டதாக, ஆய்வுகள் குறிப்பிட்டன.

9 விழுக்காட்டினர் வீடுகளுக்கு உள்ளே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 5 விழுக்காட்டினர் அடித்தே கொல்லபப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில், கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்