Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ரொஹிஞ்சா மக்கள் குறித்து அமெரிக்கா கவலை

ரொஹிஞ்சா மக்கள் குறித்து அமெரிக்கா கவலை

வாசிப்புநேரம் -
ரொஹிஞ்சா மக்கள் குறித்து அமெரிக்கா கவலை

(படம்: Reuters)

மியன்மாரில் ரொஹிஞ்சா முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி அதனைத் தெரிவித்தார்.

ரொஹிஞ்சா மக்கள் மீதான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

அதுகுறித்து மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சியிடமும், அதன் ராணுவத் தலைவர்களிடமும் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்திவருகின்றனர் என்றார் திருவாட்டி ஹேலி.

அமெரிக்கக் கூட்டுப்படைத் தலைவர் மியன்மார் ராணுவத் தலைவரிடம் தொலைபேசியில் உரையாடியதாகத் திருவாட்டி ஹேலி கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்