Images
  • bangkok
    (படம்: Bangkok Post)

பேங்காக்: விதிமீறல் புகாருக்குப் பரிசு

பேங்காக் அதிகாரிகள் விதிமீறல்களைக் கையாள அண்மையில் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சென்ற மாதம் 11ஆம் தேதி முதல் திட்டம் நடப்புக்கு வந்தது.

பொது இடங்களில், நடைபாதைகளில் விதிமுறைகளை மீறுவோர் குறித்துப் புகார் அளிப்பவர்களுக்குப் பரிசு.

அபராதத் தொகையில் குறிப்பிட்ட விழுக்காடு புகார் அளித்தவருக்குச் செல்லும்.

ஆனால் புகார் அளிப்பவர் சரியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்கவேண்டும். அது நிழற்படமாகவோ, கையும் களவுமாகப் பிடித்து எடுக்கப்பட்ட காணொளியாகவோ இருக்கலாம்.

நல்ல திட்டம் என்று நினைத்தால் வந்தது வினை! புகார் அளிப்பவர்களுக்கும் விதியை மீறியவர்களுக்கும் இடையே ஆங்காங்கே கடுமையான வாக்குவாதமும் சண்டையும் மூண்ட வண்ணம் உள்ளன.

பரிசுத்தொகையால் ஈர்க்கப்பட்ட பலர், எதை எதையோ படம் எடுத்துக் காட்டுகின்றனர். இதனால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர் அதிகாரிகள்.  

உங்கள் கருத்து

Top