Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ரொஹிஞ்சா விவகாரத்தில் பங்களாதேஷுக்கு உதவ சீனா ஆர்வம்

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், பங்களாதேஷிற்குள் அடைக்கலம் நாடிச் சென்றுள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பான நெருக்கடியில், பங்களாதேஷிற்கு உதவ சீனா முன் வந்துள்ளது.

வாசிப்புநேரம் -
ரொஹிஞ்சா விவகாரத்தில் பங்களாதேஷுக்கு உதவ சீனா ஆர்வம்

படம்: REUTERS/Eduardo Munoz

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், பங்களாதேஷிற்குள் அடைக்கலம் நாடிச் சென்றுள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பான நெருக்கடியில், பங்களாதேஷிற்கு உதவ சீனா முன் வந்துள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்களுக்குப் பயந்து, 600,000க்கும் அதிகமானோர் பங்களாதேஷிற்குள் நுழைந்தனர்.

பங்களாதேஷில், மியன்மாருடனான எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள அகதிகள் முகாம்களில், அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கூட்ட நெரிசல் மிகுந்த அகதிகள் முகாமில் பல நெருக்கடிகள் நிலவி வரும் வேளையில், சீனாவின் உதவி பங்களாதேஷிற்குக் கிடைத்துள்ளது.

நேற்று, சீன வெளியுறவு அமைச்சர், பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசியபோது, சீனா பங்களாதேஷிற்கு அளிக்கக்கூடிய உதவி பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்