Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆஸ்திரேலியப் பிரதமரின் கருத்தால் சீனா அதிர்ச்சி

சீனா ஆஸ்திரேலியாவிடம் புகார் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக, ஆஸ்திரேலியப் பிரதமர் மெல்கோம் டர்ன்புல் கருத்து வெளியிட்டதை அடுத்து, சீனா அந்தப் புகாரை சமர்ப்பித்தது.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியப் பிரதமரின் கருத்தால் சீனா அதிர்ச்சி

படம்: AAP/Mick Tsikas/via REUTERS

சீனா ஆஸ்திரேலியாவிடம் புகார் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக, ஆஸ்திரேலியப் பிரதமர் மெல்கோம் டர்ன்புல் கருத்து வெளியிட்டதை அடுத்து, சீனா அந்தப் புகாரை சமர்ப்பித்தது.

திரு.டர்ன்புல் கூறிய கருத்து, சீனாவிற்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், அந்த விவகாரத்தை சீனா வன்மையாகக் கண்டிப்பதாகவும், சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

மேலும், அத்தகைய செய்திகளை வெளியிட்ட ஆஸ்திரேலிய ஊடகங்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்வதாகவும் அவர் சொன்னார்.

ஆக அண்மையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக, சீனா வெளியிட்டுள்ள மிக வன்மையான கருத்துகள் அவை என்று அரசியல் கவனிப்பாளர்கள் சுட்டினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்