Images
  • china flight (1)
    (படம்: Reuters)

'சீனப் போர் விமானம் இடைமறித்தது'-அமெரிக்கா

தென் சீனக்கடலின் அனைத்துலக ஆகாயவெளியில் பறந்த தனது விமானத்தைச் சீனா இடைமறித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

அந்தச் செயலை பொறுத்தமற்ற நடவடிக்கை என அமெரிக்க ஆகாயப்படை வருணித்துள்ளது.
விமானம் இடைமறிக்கப்பட்ட நேரத்தில் அது வழக்கமான பணியை மேற்கொண்டிருந்ததாக அது கூறியது.

மேலும் அது அனைத்துலக சட்டத்திற்குட்பட்டு செயல்பட்டதாகவும் அமெரிக்க ஆகாயப்படை கூறியது. அந்த விவகாரத்தை பொருத்தமான
அரசதந்திர, ராணுவ வழிகளில் சீனாவிடம் தெரிவித்திருப்பதாக அது கூறியது.  

உங்கள் கருத்து

Top