Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சட்டவிரோத பதிவுகளை அடுத்த செவ்வாய்க்குள் அகற்று அல்லது Facebookக்குத் தடை: தாய்ல்ந்து

சட்டத்துக்குப் புறம்பான சில பதிவுகளை அகற்றுவதற்கான காலக்கெடு காலக்கெடு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
சட்டவிரோத பதிவுகளை அடுத்த செவ்வாய்க்குள் அகற்று அல்லது Facebookக்குத் தடை: தாய்ல்ந்து

(படம்: Reuters)

தாய்லந்து அரசாங்கத்தின் நெருக்கடியால், Facebook இணையத்தளத்துக்குத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலித்துவருவதாக, அந்நாட்டின் இணையத்தள சேவை வழங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டத்துக்குப் புறம்பான சில பதிவுகளை அகற்றும்படி Facebook-இடம் தாய்லந்து அரசாங்கம் முன்னதாகக் கேட்டுக்கொண்டது.

நாட்டின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலான அம்சங்கள் Facebook-இல் இடம்பெறுவதாக, அரசாங்கம் சொன்னது. ஆனால் அதற்கு நிறுவனம் இணங்கவில்லை என்று அமைப்பு சொன்னது.

அவற்றை அகற்றுவதற்கான காலக்கெடு இன்று காலை 10 மணிவரையில் இருந்தது. இந்நிலையில்,சட்டத்துக்குப் புறம்பான சில பதிவுகளை அகற்றுவதற்கானக் காலக்கெடு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனில், Facebook நிறுவனம்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்