Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூர் பாருவில் பறிமுதல் செய்யப்பட்ட போலிப் பால் மாவு

ஜொகூர் பாருவில், போலியான பால் மாவு என்று சந்தேகிக்கப்படும் 210 பெட்டிகளை மலேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வாசிப்புநேரம் -


ஜொகூர் பாருவில், போலியான பால் மாவு என்று சந்தேகிக்கப்படும் 210 பெட்டிகளை மலேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஐந்து கடைகளிலிருந்து அவை பறிமுதல் செய்யப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் கூறினர்.

(படம்: CNA/ Bernama)

அவற்றுள் மூன்று கடைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போலியான பால் மாவின் மதிப்பு சுமார் 42,000 ரிங்கிட் ($13,916) எனத் தெரியவந்துள்ளது.

போலிப் பால் மாவு விற்பனையில் இருக்கக் கூடுமென்று உண்மையான பால் மாவு உற்பத்தியாளர்கள், ஆகஸ்ட் மாதத்திலிருந்தே அதிகாரிகளிடம் புகார் செய்து வருகின்றனர்.

போலிப் பால் மாவு புகட்டப்பட்ட குழந்தை ஒன்று கடுமையான வாந்தியால் பாதிக்கப்பட்டது.

கடைகளில் போலியும் அசலும் ஒரே இடத்தில், ஒரே விலையில் விற்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

இதைப் பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியாது எனக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

இது குறித்த விசாரணை தொடரும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்