Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

போலிப் பால் மாவு உட்கொண்ட குழந்தைக்கு பாதிப்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசியக் காவல் துறையினர், Enfalac A+ Step 1 என்னும் பெயரிலான பால் மாவுப் பெட்டியின் போலி வடிவப் பெட்டிகள் இருநூற்றைக் கைப்பற்றினர். 

வாசிப்புநேரம் -

மலேசியாவில், போலிப் பால் மாவு கொடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் சிலர், அதுபற்றிய கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேடு அதனைத் தெரிவித்தது.

தமது 10 மாதப் பெண் குழந்தைக்கு வழக்கமான பால் மாவு புகட்டியபின் பிள்ளைக்குக் காய்ச்சலும், உடலில் சிவந்த தடிப்புகளும் ஏற்பட்டதாகத் தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் முகம், கைகள், முதுகு என எல்லா இடங்களிலும் தடிப்புகள் தோன்றியதாக அந்தத் தந்தை குறிப்பிட்டார்.

போலிப் பால் மாவு பற்றிய தகவல்களைப் படித்தபின், போலிப் பால் மாவுப் பெட்டியை, உண்மையான பால் மாவுப் பெட்டியோடு ஒப்பிட்டுக் காட்டும் படங்களைச் சோதித்துப் பார்த்ததாகக் கூறினார் அந்தத் தந்தை. 

அப்போதுதான் குழந்தைக்குக் கொடுக்கப்பட்டது போலிப் பால் மாவு என்பதைத் தாமும் தமது மனைவியும் உறுதி செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசியக் காவல் துறையினர், Enfalac A+ Step 1 என்னும் பெயரிலான பால் மாவுப் பெட்டியின் போலி வடிவப் பெட்டிகள் இருநூற்றைக் கைப்பற்றினர்.

அந்தப் பால் மாவைத் தயாரிக்கும் Mead Johnson நிறுவனம், போலிப் பால் மாவுப் பெட்டிகளை எப்படி அடையாளம் காண்பது என்பது பற்றிய செய்தியைப் பின்னர் வெளியிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்