Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

175 பேரைப் பலிவாங்கியிருக்கும் இந்தியா, பங்களாதேஷ், நேப்பாள வெள்ளம்

மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியா, பங்களாதேஷ், நேப்பாளம்

வாசிப்புநேரம் -
175 பேரைப் பலிவாங்கியிருக்கும் இந்தியா, பங்களாதேஷ், நேப்பாள வெள்ளம்

(நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கு 200கிமீ அப்பால் உள்ள ஒரு மாவட்டம், AFP/Manish Paudel)

இந்தியா, பங்களாதேஷ், நேப்பாளம் ஆகியவற்றில் பெய்துவரும் கடும் மழையால், வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
குறைந்தது 175 பேர் மாண்டனர்.

பல மில்லியன் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில், சுமார் 200 ஆயிரம் பேர் தற்காலிக தங்கும் வசதிகளில் தங்கி வருகின்றனர்.

நேப்பாளத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் நீர் முற்றிலும் தேங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படுத்திய சேதத்தின் அளவை ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

சில பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்யலாம் என்று வானிலை ஆய்வகங்கள் முன்னுரைத்துள்ளன.

பங்களாதேஷில் வெள்ளம் மேலும் மேசமடையலாம் என்று முன்னுரைக்கப்பட்டது.

குறைந்தது 18 ஆறுகள் அபாயகரமான நீர் நிலைகளை எட்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்