Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட உயர் அதிகாரிகள் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் தீட்டினர்

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் உயர் அதிகாரிகள் சிலர், ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட உயர் அதிகாரிகள் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் தீட்டினர்

படம்: AFP/Wang Zhao

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் உயர் அதிகாரிகள் சிலர், ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சீனப் பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுத் தலைவர் லியூ ஷியூ(Liu Shiyu) அவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

அதிபர் ஸி ஜின்பிங் அந்தத் திட்டத்தை முறியடித்துக் கட்சியைக் காப்பாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். South China Morning Post நாளேடு அந்தத் தகவலை வெளியிட்டது.

பெய்ச்சிங்கில் நடைபெறும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது பொதுக் குழுக் கூட்டத்திற்கிடையே அவர் பேசினார்.

ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் தீட்டியவர்களில் ஒருவர் திரு.சுன் ஸெங்சாய். அதிபர் ஸியைத் தொடர்ந்து நாட்டின் அடுத்த அதிபராகக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் அவர்.

சொங்சிங் நகரக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும் அவர் செயல்பட்டார். இந்த ஆண்டுத் தொடக்கத்தில், கட்சி விதிமுறைகளுக்குப் புறம்பாய் நடந்ததற்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்