Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவில் சிறுவயதில் நடத்தப்படும் திருமணங்களின் எண்ணிக்கை குறித்து அக்கறை

இந்தோனேசிய அரசாங்கம் 2030க்குள் குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாகத் தடுத்துநிறுத்த இலக்கு வகுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவில் சிறுவயதில் நடத்தப்படும் திருமணங்களின் எண்ணிக்கை குறித்து அக்கறை

(படம்: Reuters)

இந்தோனேசியாவில் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைப்பது பரவலாக இருக்கும் பழக்கம்.

குழந்தைத் திருமணத்தில் தென்கிழக்காசியாவில் கம்போடியாவுக்கு அடுத்த இடத்தில் இந்தோனேசியா உள்ளது.

உலகில் அதற்கு 37வது இடம்.

UNICEF எனப்படும் ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் கல்வி நிதியத்தின் ஆதரவில் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட தேசியப் புள்ளிவிவர அமைப்பின் அறிக்கை அதனைத் தெரிவித்தது.

நான்கில் ஒரு பெண்ணுக்கு பதின்மவயதை அடையும் முன்பே திருமணம் முடிந்துவிடுகிறது.

சுமனெப் வட்டார மக்கள்தொகையில் சுமார் 70 விழுக்காட்டினர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொள்வதாக அரசாங்கச் சார்பற்ற அமைப்பு ஒன்று கூறுகிறது.

(படம்:Reuters)

ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் கல்வி நிதியத்தின் சென்ற ஆண்டு அறிக்கை, இந்தோனேசியாவின் நான்கு பெண்பிள்ளைகளில் ஒருவர் 18 வயது நிரம்பும் முன்பே திருமணம் செய்வதாகக் கூறுகிறது.

இந்தோனேசியாவில் சட்டப்படி மணமுடிக்கும் வயது 21. 

இந்தோனேசிய அரசாங்கம் 2030க்குள் குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாகத் தடுத்துநிறுத்த இலக்கு வகுத்துள்ளது.

ஆனாலும் குழந்தைத் திருமணம் பாரம்பரியத்தில் ஊறிப்போன ஒன்று.

அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அரசாங்க அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்